தயாலனே- நாகூர் லெத்தீப்
புரியாதவன்
பார்ப்பதற்கு அரிதானவன்.....!
தெரியாதவன்
தெரிந்தவர்க்கு உறவானவன்.....!
மறைவானவன்
மறைந்தாலும் மதியுல்லவன்......!
தெளிவானவன்
திசைகளை வகுத்தவன்......!
அன்பானவன்
பண்புலகின் பரிவானவன்......!
ஆற்றல் மிக்கவன்
ஆணவத்தின் அதிபரானவன்.....!
மகத்தானவன்
மக்களின் மகிமைக்குரியவன்.....!
தனித்தவன்
தயால மனம் படைத்தவன்.....!
புகழுக்குரியவன்
மூவுலகின் முதல்வனானவன்....!
ஏக இறைவன்
அவனே உலகை ஆள்பவன்.....!