ஜென்ம ஜென்ம பந்தம்

ஆண்டவா..ஆண்டவா..
எனை ஆண்டிடும் நாயகா!
தேடினேன் தேடினேன்
நிதமுனைத் தேடினேன்!

காணாத இன்பம்
தேயாத சொந்தம்
நீதானே என்றும் நெஞ்சில்!

ஓயாமல் நாளும்
உன்னோடு பந்தம்
தந்தாயே நீயும் ஆனந்தம்!

பிறவிகள் யாவும்
உன்னை மறவாமல்
இருந்திட என்னை
பிடித்துக் கொள்வாயே
உன்னை விட்டு போவதில்லையே!

ஆகாயம் போல
நீ இருப்பதாலே
ஆதாயம் தானே
உந்தன் நெஞ்சம் தஞ்சம் !

உணர்வுகள் யாவும்
உன்னில் புதைத்தேனே
கனவுகள் யாவும்
இனிமைகள் தானே
ஜென்ம ஜென்ம பந்தம் நீயே!

எழுதியவர் : கருணா (4-Mar-15, 4:15 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : jenma jenma pantham
பார்வை : 146

மேலே