உன்னோடு என்றும் நான்
நான்
ஒளியைக் கேட்கிறேன்
இருளை வெறுக்கவில்லை
பலத்தை யாசிக்கிறேன்
பலவீனத்தை மறக்கவில்லை
துணையாக என்னோடு வா என்கிறேன்..
தனியாக முடியும் என்று நம்புதற்கில்லை
என்னுள் நீ .. உன்னுள் நான்
இருந்திடுவோமே இப்படியே..
இது உன் மீது நான் கொண்ட காதல்
இது உன் மீது எனக்கிருக்கும் பக்தி
இதில் ..
நானின்றி நீ இருக்க இயலும்
நீ இன்றி நான் இருக்க இயலுமா?
என்பதை நினைவு கொள் ..
முடிவு ..
உன் கையில் தான்
என் முடிவும் கூடத்தான் ..!