தலையணை
ஒவ்வொரு நாளும்
படுக்கையில்
அனுபவிக்கும்
சுகமே தனி...
***
இறுக்கிக்
கட்டிப்பிடிக்கையிலும்....
மேலே
ஏறிப்படுத்துக்கொண்டு
நசுக்கையிலும்...
ஓங்கி
அடிக்கையிலும்...
அவனுக்கு
கூச்சமும் தோன்றவில்லை...
மூச்சும் முட்டவில்லை...
அவன்
பயமும் கொள்ளவில்லை ...
பதிலடியும் தரவில்லை...
இப்படி
எல்லாவற்றையும்
பொறுத்துக் கொண்டான்...
இதுபோக ஒன்று...
அவன்மீது
தலைவைத்து
உறங்கியபின்
இந்த நாட்டிற்கே
கிடைக்காத
தனிச் சுதந்திரம் தந்தான்....
**********†**************†********************
(ராணுவ வீரனுடைய மனைவியின் புலம்பல்...)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
