மீண்டும் ஓர் காதல்
செதில் செதிலாய் சிதைந்த
ஆசைகளும், அதனோடு
தொலைந்த என் கனவுகளையும்
மொத்தமாய் சேர்த்து லட்சியத்
தழலால் தீயிட்டு சாம்பலாக்கி ,
இதயப்பையில் சேகரித்து ,
அவ்வப்போது அதனைக் கிளறி
நேற்று என்னும் பொழுது வரை
இளைப்பாறி வந்தேன் முதல் காதல்
முத்தானதென்று..............
இன்றைய நாள் ,
அவசரகதியாய் செல்கையில்
"அவள்" என்ற பெண்ணொருத்தி ,
ஆமாம் பெயர் காணும் வரையில்
"அவள்" என்பதுதானே அழைக்கும் பெயர் ,
அவள் என்ற பெண்ணொருத்தி,
இதழ்கள் விலகாது இதமாய்
புன்னகைத் தேனை அவளின்
கன்னக்குழியில் நிரப்பக் கண்டு
சிதைந்த சாம்பல் நிரம்பிய
இதயம் மெல்லமாய் துடித்து
முத்தான முதலை வெளியேற்றி
இனிப்பான இரண்டாம் பாகத்திற்காய்
வெள்ளை காகிதங்களை நிரப்பக்கண்டு
மீண்டும் ஓர் காதலுக்கு முன்னுரையாய்
அவள் முன் பல்லிளித்தபடி
நான்.................
லட்சிய தழல் எரிய
இன்னும் சில காலம் ஆகலாம் ........