தனிமை

அன்பின் அரசும்
அடிமை சாசனமே
அளித்திட...
ஆட்சிக்கு ஆசனம்
தந்தது
தனிமை ராஜ்ஜியம்...!

அந்தி சாயும் நேரம்
மந்தாரமாய்...
வேர்வையில் உரசி செல்லும்
தென்றலாய்...
இதமாய் ஒரு மௌனம்
தனிமையில் இனிமையாக...!

நவரச வேடங்கள் கலைய
நிதர்சனம் காட்டுது
தனிமை...
அதிசய ரசம் தோய்ந்த
நிலைக் கண்ணாடியாக..!

சுற்றம் விடுத்து
சுற்றுகிறேன்...
ஊரடங்கும் வேளையில்
ஊர்வலம் போகும்
ஏகாந்த நிலவாக..!

எழுதியவர் : Monisha (6-Mar-15, 12:22 am)
Tanglish : thanimai
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே