கனவு தாகம்
மெல்லிய காதிற்குள் இரைந்து
எழுப்பிவிடும்
அழைப்பானை அழுத்திவைத்து
மீண்டும் மீண்டும் உருண்டு தூங்கும்
என்னிடம்
உன் பஞ்சு பாதங்களால் நெருங்கி வந்து
பட்டு கைகளால்
என் கன்னம் தொட்டு கிள்ளி எழுப்பி
கூந்தலால் என் நெற்றி வருடி
உன் கிளிப்பேச்சால்
காலை வணக்கம் சொல்லி...
அத்துடன் துவங்கப் போகும்
இனிய பொழுதை மேலும் இனிதாக்க
ஒரு முத்த தூறலை
பரிசாக நீ தர வேண்டும் என்று
என்று...என்று...என்று...
எத்தனை வருடங்கள்தான் நான்
கனவிலேயே வாழ்வது???
என்று தீரும் இந்த கனவு தாகம்??....

