TRANSLATION OF பரவச பறவையாகிறேன் BY SRIRAJKUMAR

பரவச பறவையாகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
புரண்டுப் புதைந்த
பூலோகப் பூக்களின்
வர்ணம் பிசைந்து ...
மிரண்டு விழுந்த
மின்னலின் முகத்தில்
மின்சாரம் பிடுங்கி ..
வெடித்துப் பிளந்த
எரிமலைப் பிழம்பில்
என்னுடலை அழுத்தி ...
சரிந்து உடைந்த
பனிமலைச் செதிலில்
விழிகளை கிழித்து ...
உதிர்ந்து வீழ்ந்த
உயிரின் நகலில்
உணர்வினை உரித்து ...
Blending all the richness of fallen flowers
Plucking the electric spark of the dreadful lightening
Plunging my body into the volcanic flow
Tearing the vision with that landslide snow
Shearing the feelings from the dropping Life.....
முதிர்ந்து முனையும்
காதலின் கவியில்
தேன்மொழியை தெளித்து ...
அதிர்ந்துத் தெறிக்கும்
மூளையின் துகளில்
யாவையும் பதித்து ....
என்னுள் ..
உன்னைப் படைத்து
பரவச பறவையாகிறேன் ,..
Showering words of love in a riping song
Stamping all these in the shattering brain
So I bring you live in me and hold
Thus I fly high like a merrisome Bird!