பித்தலாட்டம்

ஒரு பையன் தன்னோட காதலிக்கு போன் பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னு பாருங்க.

அப்பா : ஹலோ....யாருங்க பேசுறது?

பையன் : சார்,நான் CITY BANK'ல இருந்து மேனேஜர் அழகேசன் பேசுறேன்.

அப்பா : சொல்லுங்க சார்.என்ன விசயம்?

பையன் : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க. நாங்க லோன் தரலாம்னு இருக்கோம். அதான், உங்க பொண்ணுகிட்ட சில விபரங்கள் கேக்கணும்.அவங்கள கொஞ்சம்
கூப்பிடுங்க சார்.

அப்பா : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என்
பொண்ணு வருவா.

பொண்ணு : ஹலோ, நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க.

பையன் : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன். ஐ படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன். நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம்.

பொண்ணு : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க
அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன்.

அப்பா : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே.

பொண்ணு : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன்.

எழுதியவர் : சந்திரா (6-Mar-15, 11:07 pm)
பார்வை : 243

மேலே