பொடிப் பூச்சு
கொடிய அரக்கி வாழ்ந்து
கொடுந்தீமைகளச் செய்தாளாம்
அவள் நினைவில் ஒரு திருவிழாவாம்
அதற்கு வண்ணப் பொடிகளைக் காற்றில் தூவிக் கலக்கணுமாம்
முகத்திலும் பூசிக்கொள்ளணுமாம்
காண்பவர் முகத்திலும் பொடித் தூவல்
கண்ணுககு இனிய காட்சியாம்
இதுவும் ஒரு திருவிழாவாம்.
நல்லதைப் போற்றிக் கொண்டாட
நல்லதைப் போற்றிக் கொணடாட
நாட்டமில்லை எங்களுக்கு
இயற்கையை அழிக்கும் கொண்டாட்டம்
எங்கள் உயரந்த பண்பாடு
வேதிப் பொடிகளும் வெடிகளும்
தருகின்ற மகிழ்ச்சி வேறேதெலுமில்லை