மகளிர் வாழ்க

ஆடவரில் சித்தருண்டு
அவள் உதிரத்தினைப் பாலாக்கி. ..
ஐயிரண்டு மாதங்கள் அடிவயிற்றில்
அனலைக் கட்டிக்கொண்டு
அவள் உயிரென்று பிள்ளை காக்கும்
அன்னையுண்டா....?

ஆடவரில்..அதிகாரிகளுண்டு ..
அவள் அதிகாரம் தனை மறந்து..
அல்லும் பகலும் கணவன் நலம்
வேண்டியே அவனுக்கு துணையிருந்து
அவனுக்கு முன்னதாய் அகிலம் துறந்து
பூவும் பொட்டும் மஞ்சளோடு
தீர்க்க சுமங்கலியாய் போக வேண்டிடும்
அன்பு மனைவியுண்டா..?

ஆணின் இடுப்பெலும்பில் உருவானவள்
என்பது உண்மையோ..இல்லையோ..
வேலைக்குப் போனாலும் வீட்டுக்கு வந்தவுடன்
இடுப்பொடிய வேளை தவறாமல்
பொங்கிப்போடும் ஆடவர் உண்டா..?

தியாகத்தின் உருவாக..
தாயாக ..சீதைகளாக..
அன்புத் தங்கைகளாய்..
பாசத் தமக்கையராய்..
மகள்களாய்..மண்ணுலகில்
மகளிராய்..சக்தியின் வடிவமாய்..
வாழும் பெண்டிருக்கெல்லாம்..
போற்றியே வாழ்த்துதற்கு ஒரு நாள் ..
மானிடர்க்கெல்லாம் திருநாள்..
மகளிர் தினமாய் ..வரும் நாளை
(நாளை)
வரவேற்று வாழ்த்திடுவோம்
நம்மையெல்லாம் வாழவைக்கும்
பெண்குலத்தை..
மேற்சொன்ன. அத்தனை வடிவங்களும்
எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் ..
என்..வாழ்வில் ..உண்மையிது ..
நண்பர்கள்..நம்புங்கள்..
மகளிரைப் போற்றிடுங்கள்..
மண்ணும் பயன் பெரும் !

எழுதியவர் : கருணா (7-Mar-15, 10:09 pm)
Tanglish : makalir vazhga
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே