மகளிர் தின வாழ்த்து
உலகியல் உண்மை, மனிதம்
உருவாக்கத்தின் தொடக்கம் பெண்மை..!
அழகியல் கொஞ்சும் நேசம்
இவள் பார்வையில் சிந்தும் பாசம்..
கண்ணில் கருமையினை பூசும்-இவள்
கருணையின் பிறப்பிடம்..!
உதட்டில் சாயம் பூசும்-இவள்
உலக அதிசயத்தில் முதல் இடம்..!
சேலை கட்டும் பாவை-இவள்
மணம் வீசும் மலர்ச்சோலை..!
அரவணைப்பில் அன்னையாகவும்,
உருவமைப்பில் தங்கையாகவும்,
சுகம், சுமை பகிரும் தாரமாகவும்,
விழி அழுதால் கரம் கொடுக்கும்
தோழியாகவும் தோண்றும் பெண்ணை..!
பழி பாவம் செய்து பருந்தாய் கொத்தாமல்,
கண் விழி என நினைத்து காப்போம்..!
கருவில் நமை சுமந்த
பெண்மையினை போற்றுவோம்..!
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!
-இந்திரன்.