அம்மா
அண்ணன் தம்பி, அக்கா தங்கை
உடன் சேர்ந்து உண்ட,
அம்மா தந்த உணவு போல!
கொண்ட மனையால் தந்த
அறுசுவை உணவு கூட
ருசிக்கவில்லை!
வயிறு நிரைந்த அளவு கூட
மனம் நிரம்பவில்லை!
சுவையூட்ட பலதும் சேர்த்த அம்மா
அன்பு பாசம் இவையும் சேர்த்ததாலோ
வெறும் சோறும் மணக்க சுவைத்தது!
அவ்வுணவை சுவைத்த போது
எம்முள்ளம் நிரைவாய் ஆனது!