ஒத்த மரம் ஏங்கிடிச்சி
மஞ்சவானம் இறங்கிடிச்சி
மனசக் கொண்டு வாடி புள்ள
மூனாந்தெரு சுத்திவந்து
மூச்சுமுட்டுது வாடிபுள்ள
கண்ணோரம் காதல்பேச
ஊரோரமா வாடிபுள்ள.
பத்துநகம் தீந்துடிச்சி
ஒத்தமரம் ஏங்கிடிச்சி
சத்தநேரம் நிக்கயில
சந்தேகமா பாக்குறாக
மீசக்கார முனியாண்டி
வௌக்கெண்ண வேல்பாண்டி.
ரொம்ப நேரம் ஆகிடிச்சி
தண்டனையா திரும்பி நிப்பேன்
ஊசிபனி குத்தும் வேளை
பாசிமணிய பொத்தி நின்னேன்
இப்போதைக்கு வச்சுக்கோடி
தங்கமா நான் முத்தந்தாரேன்..
--கனா காண்பவன்.

