பண்படுத்துதல்

பண்படுத்துதல்........
~~~~~~~~~~~~~~~~~~~
வலிக்கிறதென நினைத்தால்
நிலம் பண்படுவதில்லை
வெடிக்காமல் போனால்
விதை வேர்விடுவதில்லை
உடைந்து போகும் கற்கள்
சிலயாகுவதுமில்லை - சில
வலிகளைத் தாண்டித்தான்
நல்வாழ்வு பெறவேண்டுமென்பது
விதியாயின் அதை மதியோடு
ஏற்பது மகிழ்வாகும் .

உழுபவன் நீயாகில்
நிலம் நானாகிறேன்
உன் பழிச் சொற்களையும்
பக்குவப் படுத்தலேன்றே
நினைக்கிறேன்
எனக்குப் பதில் இன்னொருவாயின்
உன் பக்குவப் படுத்தலை
தாங்குமா அந்நிலைமென
நினைக்கையில்
பெண்மை பீறிட்டு
ஆண்மை வெளிக்கொணர்கிறது
புரட்சிக் கவி “பாரதி”யாக

.............. சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (10-Mar-15, 9:38 am)
பார்வை : 120

மேலே