பாதை முடிந்த பள்ளிப்பருவம்

கையில் என்னை எடுத்திடு
மையில் என்னை நனைத்திடு என
கண்ணீரில் கரைந்தது பேனா


அழுக்கு படிந்ததே என்மேல்
அணிய மாட்டாளோ என்னை என
துடித்தது பழமையாகிவிட்ட சீருடை

பள்ளிக்கு செல்ல நேரமானதே
புழுதியில் புலம்பி தவிக்குது
பரணில் ஏறிய உணவுபாத்திரம்

கவனிப்பாரின்றி கிடக்கிறேனே நான்
விட்டுசென்று விடுவாளோ என்னை
குழந்தையாய் விழித்தது புத்தகப்பை

ஆனால் கண்டிப்பாக மறுத்தது
காலண்டர் காலம் கடந்தது என்று

எழுதியவர் : (10-Mar-15, 12:44 pm)
பார்வை : 166

சிறந்த கவிதைகள்

மேலே