பெண்ணென பெருமிதம் கொள்
கணிப்பொறியில் கை வைக்காமல்
கழனியில் கால் பதிக்க ஆவல்!
பொற்குவியலாய் நெற்குவியல்
அள்ளிட எண்ணம்!
படித்து பட்டம் வாங்கினாலும்
பரம்பரைத் தொழிலை
பின்பற்றிட விருப்பம்!
எஞ்சினியரிங் படித்தாலென்ன
எம் கைகள்
ஏறு பூட்டி உழுதிடவும் செய்யும்!
படித்தவர் எல்லாம்
கால்மேல் கால் போட்டு
வேலை செய்தால்
உணவில் கை வைக்க
யாராலும் ஆகாதன்றோ...?
நாங்கள்
நாற்றையும் நடுவோம்!
நாட்டையும் ஆள்வோம்!
விமானமும் ஓட்டுவோம்!
விவசாயமும் செய்வோம்!
களையும் பறிப்போம்!
கல்வியும் கற்போம்!
நீரூற்றி நெடுவயல் நிறைய காண்போம்!
வேரூன்றி
வான்வரை வளரவும் செய்வோம்!
அறுவடைப் பயிராய்,
விளைந்த விளைச்சலாய்,
குவிந்த மலையாய்,
வானத்து வள்ளலாய்,
எழுந்த சூரியனாய்,
விடிந்த வெள்ளியாய்,
பாரிலே
பெருமிதம் கொள்வோம்
பெண்ணினமாய்!