மழலைகள்

மழலைகள்

பள்ளியில் நுழைந்ததும்
பாலகன் ஓடி வந்து
கைப்பையை கைப்பற்றி
பார்வையால் சிரித்துவிட்டு
சிட்டாய் பறக்கிறான்

உணவு அருந்தும் போதும்
உண்மையாய் அருகில் வந்து
உற்று உற்று பார்த்து
உற்சாகம் பெறுகிறான்

பள்ளி நேர விளையாட்டில்
பண்பாய் கைப்பிடித்து
விளையாட அழைக்கிறான்

பாசம் மட்டுமே கொஞ்சும்
பஞ்சு முகங்களை
பார்த்தால் -நேசம்
மட்டுமே வைக்க தோன்றும்

வீட்டுப்பாடம் எழுதிவிட்டேன் -ஆனால்
வீட்டில் இருக்கிறது
எனும் போதும்

டீச்சர் இன்னைக்கு இந்த
புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு -எனும்


ஜாலம் இல்லா வார்த்தைகள்
ஜலதரங்கம் என்றும்

வழியில் பார்த்தாலும்
மார்க்கெட்டில் பார்த்தாலும் -ஐ
நம்ம maths டீச்சர் என்று
ஓடி வந்து கட்டிக்கொள்ளும்

மழலைகளுடன் மழலையாய்
தடம் பதிக்கவே விழைகிறேன்
நாளும் ....

சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (11-Mar-15, 1:56 pm)
பார்வை : 109

மேலே