காலம் மாறிவிட்டது
--காலம் மாறிவிட்டது---
ஐம்பதைத் தாண்டுவோமா
என்று புலம்பிய காலங்கள்
மங்கள்யானாய் விரைந்து
ஏததோ மருந்துகள் என்னை
எழுபத்தைந்துக்கு
இழுத்து வந்துவிட்டது.
அன்று
எல்லோர் கையிலும்
ஒரு தொடுதிரைக்
கைப்பேசி இருந்தது.
வாட்சப்பில் வாழ்ந்த சுகம்
இன்னும் நெஞ்சில்
நிழலாடுகிறது.
இணையத்திற்கு
அடிமையாகியும்
சுதந்திரமாக திரிந்தோம்.
முகநூல் நட்பெல்லாம்
இப்போதிருக்கும்
டோவோத்ருவில்
கிடைப்பதேயில்லை.
ஆன்லைனில்
அவள் வரும்வரை
ஸ்க்ரால் எல்லாம்
சும்மாவே.
இப்போதிருக்கும்
இசையோடு ஒப்பிட்டால்
ஏஆரின் ஜனகனவும்
மெல்லிசை தான்.
இதெல்லாம்
ஒரு அனிமேசனா
நான் அவதார் பார்க்கயில்
சிரிக்கிறாள் பேத்தி.
இன்னொரு சேதி தெரியுமோ
தமிழில் இரண்டு
அணியிலக்கணங்கள்
புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள்.
செவ்வாய் அணி,பெகல்லா அணி.
என் மஞ்சள் படிந்த
காகிதங்களில்
சில ஹைக்கூக்களை
வாசித்த பின்
பழையத்தூளில்
போட்ட டீயெனச் சொல்லி
இதோ
'லஜோபியாவில்
நீ கடக்கயில்
என் நெஞ்சில்
லாசுவாகோசு வேல்லி'
இதான் கவிதையென
எழுந்துச் செல்கிறான்
பேரன்.
ம்ம்ம்.
காலம் மாறிவிட்டது.
--கனா காண்பவன்