பூச்சிக் கொல்லி

அவனை மறக்க
மலர்செடிகளை
சாகுபடி செய்தாள்
சொட்டு நீர் பாசனமுறை போல்
சிறிது சிறிதாய்
மறக்க நினைத்தாள்
செடிகளில் பூச்சிகளின் தாக்கம்
என்ன பூச்சிக்கொல்லி
மருந்து தெளிக்க?
அதிக மகசூலுக்கு
என்ன உரமிட
அவனிடம் கேட்டாள்
அடிக்கடி.......
நன்றாய் மறந்தாள்
அவனையல்ல அவளை
அதிகமாய் நேசித்தாள்
மலர்களுடன் மௌனத்தை..........
..........சஹானா தாஸ்