காதலித்துப்பார்
காதலித்துப்பார்
கவிஞசனாக வேண்டுமென்ற ஆசை
உனக்கிருந்தால்!
காதலித்துப்பார்
தமிழ் எழுத்துக்களின் சுவையை நீ
ருசிக்க விரும்பினால்!
காதலித்துப்பார்
இதுவரை வெறுத்த தனிமை
இனிமேல் விரும்ப நினைத்தால் !
காதலித்துப்பார்
தோட்டத்து பூவெல்லாம்
உன் உள்ளத்தில் பூக்க வேண்டுமென்றால்!
காதலித்துப்பார்
காதலின் பேச்சில் காந்தம்
இருப்பது தெரிய நினைத்தால்!
காதலித்துப்பார்
மாலை அழகில் மதி மயங்கும்
ஆசை உனக்கிருந்தால்!
காதலித்துப்பார்
உனக்குள் ஒரு கோடி கவிஞ்சன்
உட்கார்ந்திருப்பதை
உணர விரும்பினால்!
காதலித்துப்பார்
கோடை பருவமும்
குளிரும் விந்தையை
காண விரும்பினால்!
காதலித்துப்பார்
காத்திருப்பின் சுகத்தை
உணர வேண்டுமானால்!
காதலித்துப்பார்
நக்கீரன் - சிவபெருமாள்
சண்டைகளின் சாராம்சம்
தெரிய வேண்டுமானால்!
காதலித்துப்பார்
சிறகே இல்லாத நீ
வான வீதியில்
பறக்க விரும்பினால்!
காதலித்துப்பார்
நிமிடங்கள் மணி ஆவதும்
மணி துளிகள் நிமிடமாவதும்
உணர வேண்டுமானால்!
காதலித்துப்பார்
இதழ் பூவின்
இனிப்பு சுவையை
ருசிக்க விரும்பினால்!
காதலித்துப்பார்
கடற்கரை சூடும்
கடுங்குளிர் எனவே
மாறும் விந்தை
கண்கள் காண!
காதலித்துப்பார்
துயரங்களை விலகும்
சூட்சுமம் புரிந்து கொள்ள !
காதலித்துப்பார்
கண்ணாடி முன் நின்றதும்
உனக்கு பதில்
இன்னொரு முகம்
காண வேண்டுமானால் !
காதலித்துப்பார்
நீ அவளாகும்
விந்தையை புரிந்துகொள்ள !
காதலித்துப்பார்
வெறுத்து போன வாழ்க்கை என்னும்
உன் வார்த்தைகளை
வெறுத்து போக சொல்ல !
காதலித்துப்பார்
சிரிப்பின் ரகசியங்களை
உள்ளம் புரிந்து கொள்ள !
காதலித்துப்பார்
உலக இன்பங்கள்
ஒன்றாய் வந்து
உன்னை சூழ்ந்துகொள்ள !
காதலித்துப்பார் !
காதலித்துப்பார்!
காதலித்துப்பார் !