காதல் மாலுமி

காதல் மாலுமி!!!

கன்னி இவளது
கலங்கிய மனதில்
கலவரக் கனவுகள் மூளுதே...

கற்பனை முதிர்ந்து
கார் கால முகிலாய்
கரு நொடிக்கொரு முறை
கடந்து உருமாறுதே...

கடும்பாறையாய் இருந்த நெஞ்சம்
கசிந்துருகி கவிழ்ந்து
காற்றாற்று வெள்ளமென
கரை புரண்டு ஓடுகின்றதே...

கருகிய நெஞ்சத்தில்
கட்டுக்கடங்காத
காட்டுத் தீயினால்
காரிருள் புகை சூளுதே...

கள்ளங் கபடமற்ற பெண்ணிவள்
கங்கணம் கட்டிக் கொண்டு
கால சுழற்சியில்
கைதியாவது வேடிக்கையன்றோ???

கயல்விழியால் வளர்த்தவர்களின்
கடன்களுக்கான வட்டி விகிதமாய்
கட்டளைக்கு இணங்கியவள்
கதரும் கருவிழிகளில்
குருதி நிறமாறுதே....

கானல் நீராய் வாழ்வது
காரணமின்றி வெறும்
காட்சிப் பிளையானது ஏனோ??

காதல் மீது கொண்ட நம்பிக்கை
காணாமல் போனது எதனாலோ?

கருத்து யுத்தத்தில்
கப்பலில் காதல் மாலுமியுடன்
கரை சேர்வேனா? இல்லை
களைந்து கரைவேனா?

காதல் எனும்
கருப்பு முத்தைத்தேடி
கருங்கடலில் பயணியாய்...

இவள்
சூரியா

எழுதியவர் : சூரியா (13-Mar-15, 7:35 am)
Tanglish : kaadhal maalumi
பார்வை : 176

மேலே