இடைவிடா ஏக்கங்கள் தொடருதே
இளமஞ்சள் கொன்றை மலரின்
இடைவிடா ஏக்கங்கள் தொடருதே...
இரவல் போன மனதினால்
இரையும் கனவுகள் வளர்கிறதே...
இமைகள் விரிந்தால் வெருமையே...
இதழில் வரண்ட புன்னகையே...
இளைத்தது இவள் தேகமே....
இலையுதிர் காலம் நீளுதே...
இளவேனில் சுடுகின்றதே.....
இலவம் முற்றி காய்கிறதே...
இனையற்ற தனி மரமே....
இறகுகள் உடைந்த பறவையே....
இரயில் பாதை ஒற்றையாய் நீளுகின்றதே
இதயம் ஏங்கி நொறுங்குதே...
இருண்டது எந்தன் உலகமே....
இலக்கணப் பிழையாய் வாழ்க்கையோ???
இனி எதைக் கொண்டு வாழ்வேனோ?
இதயத்தை எங்கனம் சீர் செய்வேனோ?
உன் இதயம் கவர்ந்த மங்கை அவள் யாரோ?
உன் நேசத்திற்குரிய பூவை அவள் யாரோ?
உன் கனவுகளின் ஆதியும் அந்தமும் யாரோ?
உன் நிஐங்களில் உறையும் பெண்மை யாரோ?
உன் அருகாமையை ஆழ்ந்து அனுபவிப்பவள் யாரோ?
உன் பேராண்மையை தழுவும் பேரழகி யாரோ?
உன் சலனங்களில் தெளிந்த நீரோடை ஆம்பல் யாரோ?
உன் வித்தை விருட்சமாக்கப் போகும் துணை யாரோ?
உறைத்திடு ஒற்றை வார்த்தையில்
உன் காதல் காவியம் யார் என்று?
சூரியா