“கரையான் சமூகம் கரையும் மனிதம்”

எனது கட்டூரையின் விரிவுரையாய், பிறப்பு முதல் இறப்பு வரை பெண்கள் எதிர்கொள்ளும் வேதனைகளைப் பற்றி விரிவாய்ப் பதிக்க முற்பட்டேன்.. ஆனால் சில மனித கரையான்களின் கூட்டம் கூரியது, பெண்ணின் பிறப்பிற்கு முன்பே இறப்பு என்பது நிர்ணயமாகிவிட்டது..! இதில் எங்கே நீ..! பெண்களின் பிறப்பு முதல் இறப்பு வரை என, என் முகத்தில் அரையாவண்ணம் அறைகூவல் விட்டது..!

ஆம், இனறைய சமூகத்தின் நிலமையும் அப்படித்தான் இருக்கின்றது போலும். அன்றாடம் நாம் கூறிக்கொண்டிருக்கிறோம், பெண்சிசுக் கொலைக்கு எதிரான மாற்றத்தினைக் ஏற்படத்த வேண்டுமென்று..! மாற்றம் ஏற்பட்டதென்னவோ உண்மை தான். வெறும் தொழில்நுட்பத்தில் மட்டும் மாற்றம்.
முன்பெபல்லாம் பெண்! கருவாகி,
பின் உருவம் பெற்று சிசுவாகி,
கை, கால் முளைத்த காந்தல் மலராய், தன் காலடியினை பூமியில் பதிக்க முற்படும் கனத்தில், குணத்தில் விஷம் படிந்த சில மனித கரையான்கள் தஙகள் கண் விழிகளை பிதுக்கிக் கொண்டு, குழந்தையின் கால் இடுக்கினை விளக்கிப் பார்த்து, ஆணா, பெண்ணா என ஆராயும் வேளையிலே, ஆண்குழந்தை என்றால் அனிந்து அலங்கரித்து அழகு பார்க்க தங்கத்தினை ஒரு கையிலும், பெண் குழந்தை என்றால் திரும்ப வழியனுப்ப கள்ளிப்பாலினை மறு கையிலும் வைத்துக்கொண்டு காத்திருந்தனர் அன்று..!

இன்றோ..! தொழில் நுட்பத்தின் வளர்சியனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, கருவிலேயே பிறக்கப்போவது பெண்தான் என தெரிந்து கொண்டு, பூவுலகில் காலடி வைக்கவும் மனம் இறங்காத இன்றைய நவீன உலகில்
நாகரீக உடையணிந்த நயவஞ்சகர்கள், கருவிலேயே கல்லரையினை பரிசாய் தந்து விடுகின்றனர் பெண்சிசுவிற்கு.

அதிலும் மீண்டு மலர்ந்து வந்து இந்த மதி கெட்ட சமூகத்தினை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் பிறக்கும் ஒரு சில குழந்தைகளுக்கும், தாய் மடியென குப்பைத் தொட்டியனையும், தங்க கிரீடமாக முட்புதர்களையும்,
இனிக்கும் சக்கரைக் கட்டியாய் இருக்கும் அந்த அழகுப் பெண் குழந்தையினை..! ஈ, எரும்புகள் சுவைக்க வீதியோரம் வீசிச் செல்லும் ஒரு சில மனித ஓநாய்களை இந்த சமூகத்தில் இருந்து என்ன சொல்லி விரட்டப் போகிறோம்.!

எழுதியவர் : இந்திரன் (13-Mar-15, 10:59 am)
சேர்த்தது : ராஜ் இந்திரன்
Tanglish : manitha karayaangal
பார்வை : 1132

மேலே