இரத்தம் சிவப்புதான்---ப்ரியா

'ஐஸ்சு' 'ஐஸ்சு' 'ஏய் ஐஸ்வர்யா' என்றுக்கூப்பிட்டுக்கொண்டே வாசலில் ஏறினாள் சொப்னா.

தாயின் குரல் கேட்ட ஐஸ்சு பதற்றமானாள் கையில் நஸ்ரியா பானு கொடுத்த அசைவ தின்பண்டம் வாயில் போட்டதையும் சாப்பிடாமல் வெளியே துப்பிவிட்டு.இதோ வந்துட்டேன் அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே தன் கையில் இருந்த மீதி பண்டத்தையும் வீச மறந்து சென்றாள்.

தன் மகளை கோவமாய் பார்த்தவள்......வா இங்கே கையில் என்னடி?யாரு அந்த அந்த நஸ்ரியா பானு கொடுத்தாளா?சாதி கெட்டவ , அவ என்ன ஜாதி நம்ம என்ன ஜாதி கண்டதையும் அவக்கிட்ட இருந்து வாங்கி சாப்பிடுறது அவகூட சுத்துறது.......இதெல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன் என்று கோவமாய் கத்திவிட்டு அவள் கையிலிருந்ததை பிடுங்கி வெளியில் எறிந்தாள் சொப்னா ........!

அழுது கொண்டே உள்ளே சென்றாள் ஐஸ்வர்யா.

இந்த விஷயம் அடிக்கடி இங்கு நடப்பதுதான் எல்லாம் பழகி போயிடிச்சி தாய் மகள் இருவருக்குமே.....

நஸ்ரியா மற்றும் ஐஸ்வர்யா இருவருமே முதல் வகுப்பிலிருந்தே இந்த ஆறாம் வகுப்புவரைத்தோழிகள் தான், அவள் கொடுப்பதை இவள் வாங்குவதும் இவள் கொடுப்பதை அவள் வாங்குவதும் என வழக்கமாக நடக்க......ஐஸ்சு மட்டும் அடிக்கடி வீட்டில் மாட்டிக்கொண்டு இப்படி அவஸ்தைபடுவாள்.

ஐஸ்வர்யாவின் வீட்டில் அப்பா அம்மா என தனிக்குடும்பமாக வாழ்ந்துவந்தனர்........நஸ்ரியா பானுவின் வீட்டில் அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமா என கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

அன்று மாலை சொப்னா விட்டில் தனியாக இருக்கும் போது அழைப்பு மணி ஓசைக்கேட்டு வாசலை நோக்கி வந்தவள் ஜன்னலின் கண்ணாடி வழியே யாரென எட்டிப்பார்த்தாள்.........நஸ்ரியாபானுவின் தாத்தா வாசலில் நின்றார்.

இவரா?இவர் எதுக்கு இங்கு வந்திருக்காரு என்று முகத்தைச்சுளித்துக்கொண்டு கதவை திறந்தாள்.

என்ன என்று அலட்சியமாய்க்கேட்டாள்?

அவரோ பதற்றத்துடன்.......

"அம்மா உன்குழந்தைக்கு அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறாங்க உடனே புறப்படு"என்று சொன்னார் அவர் சொன்னதும் இவளுக்கு தலையே சுற்றியது என்ன சொல்றீங்க என்று பதற்றமாக கேட்டாள்? நீங்க வாங்கம்மா எல்லாம் அங்க போய் பேசிக்கலாம் என்று அழைத்தார்...........எதுவும் பேசாமல் பதற்றத்துடனே அவருடன் ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்றாள்.

மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் முழுவிபரமும் அறிந்தாள் சொப்னா, ஐஸ்சுவின் அப்பாவுக்கும் தகவல் கொடுத்தாள்.........

பள்ளியிலிருந்து மாலையில் வீடு திரும்பும்போது சாலையை கடக்கும் சமயம் எதிரே வந்த சிறு கார் மோதியதில் தலையில் பலத்த அடிப்பட்டு மயங்கினாள் ஐஸ்சு......அப்போது நஸ்ரியா பானுவை வீட்டுக்கு அழைத்து செல்ல அவளது தந்தை இப்ராஹிம் வந்திருக்கிறார் அவர்தான் அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தந்தைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கு இரத்தம் அதிக அளவு தேவை படவே இப்பொழுது அவளுக்கு உள்ளே இரத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்...
இது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே நஸ்ரியா பானுவின் தாத்தாவின் காலில் விழுந்து அழுதாள்.

அதற்குள் ஐஸ்வர்யாவின் அப்பாவும் வர....இவருவரும் நன்றி இப்ராஹிமின் கைகளை பிடித்து அழுது நன்றி சொன்னார்கள்.

இந்த சம்பவத்துற்கு பிறகு ஜாதிமத பாகுபாடின்றி இருக்குடும்பங்களும் சந்தோஷமாய் நல்ல நண்பர்களாகி விட்டனர்.

சிறிது நாட்களில் ஐஸ்வர்யாவும் உடல்நலம் பெற்று வீடு திரும்பினாள்.

காரிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தாள் சொப்னா.......அங்கிருந்த ஒரு கல்லறைத்தோட்டத்தில் கல்லறைகளைப்பார்த்தாள்.
அவை சாதிக்கலவரத்தால் மாண்டவர்களின் கல்லறைகள்.இப்போது அவள் மிகவும் தெளிவாய் இருந்தாள்.அந்த கல்லறைகள் வெறுமனே பழமையாய் தோன்றின.
அவற்றில் புற்கள் முளைத்திருந்தன.......அப்பொழுது அவளுக்கோ......?????

"சாதி கலவரத்தால்
சண்டையிட்டு
சாவை தழுவியவர்களின்
கல்லறைகள் மேல்
புற்கள் முளைத்தன!
எல்லாம்
பச்சையாய்
ஒரே நிறத்தில்"

என்று எங்கோ படித்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

சொப்னா இப்போது மனிதனின் ஜாதி மதங்களை பார்க்காமல் மனதை மட்டும் பார்க்கிறாள்.முன்னால் நடந்த ஜாதிக்கலவரத்தில் இவள் குடும்பத்திற்கும் பங்குண்டு என்பதை நினைக்கும் போது அவளுக்கு தன் மேல் கோவமும் வெட்கமும்தான் வந்தது, இவ்வளவு நாள் ஜாதி மதம் என்று பேசும் மிருகமாய் இருந்தவள்............இன்று இவள் மனதை திருப்பியது இரு வேறு ஜாதியினரின் இரத்தம் ஒரே சிவப்பு நிறம் என்பதால்தானோ....?!!!

எழுதியவர் : ப்ரியா (13-Mar-15, 11:53 am)
பார்வை : 410

மேலே