தாய்மை -----சுடர்

அலைந்து திரிந்த என்னை
அன்றொருநாள்
கருப்பு பெட்டி ஒன்றுக்குள்
அடைக்கப்பட்டதாய் ஒரு நினைவு ....
அங்கே,,,
ஆழ்கடலின் அலையைப்போல்
ஆர்ப்பரிக்கும் ஒரு சத்தம்
ஆனாலும் என்னில் ஒருநிசப்தம்...
பிளவுப்படும் பாறைகளாய்
ஒரு முழக்கம்
ஆனாலும் என்னில் ஒருமௌனம் .....
சிக்கிக்கிழியும் முகில்களின்
முனகலாய் பேரீரைச்சலொன்று
ஆனாலும் என்னில் ஒருபரவசம் .....
எரிமலைக்குழம்புகளாய்
ஒரு தாக்கம்
ஆனாலும் என்னில் ஒருசிலுசிலுப்பு ....
காட்டாற்று வெள்ளமாய்
ஒரு பரபரப்பு
ஆனாலும் என்னில் ஒரு வெதுவெதுப்பு .....
அங்கு ,,,
வீசும் தென்றலும்
தட்டிச்சென்றது ..
பூக்கும் மலர்களும்
தொட்டுச்சென்றது ....
கனவுகளில் கரைந்தேன்
கற்பனையில் மூழ்கினேன்
காலம் கடந்தது
கடவுளிடமும் வரம் கேட்டேன்
அந்தப்பரிசத்தினை தந்தவளின் முகம்காண வேண்டுமென்று ....

===========================இரா.சுடர்விழி =============================

எழுதியவர் : இரா.சுடர்விழி (16-Mar-15, 10:12 am)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 336

மேலே