கருணைக்கு வந்த சோதனை

அதிகாலை.
சிறிது விழித்தவுடன்
சக்கரமொன்று என்
யாக்கையோடு இருக்கமாய்
ஒட்டிகொண்டது.
உருண்டாலும்
பிரண்டாலும்
அது விடவே யில்லை.

சகிப்பின் உச்சத்தை வென்ற
விழி மறுபடியும்
கிறங்கி கொள்கயில்
மெதுவாக சுழல்வது போல
உணர்வு...
ஒரு சுற்று முடிகையில்
அப்பாவின் மருத்துவக்காசு
அடுத்த சுற்றுக்கு
தங்கையின் சுற்றுலாக்காசு
அடுத்த சுற்றுக்கு
மீதி வைத்த நேற்றைய வேலையென
ஒன்று ஒன்றாய் உணர்த்தியது அந்த சக்கர
சுழல்.....

எல்லாம் கலைத்து
உழைக்க ஓடிப்போய் - உயிர்
பிடித்து தொங்கிய சில கணம் கழித்து
பேருந்தில் அமர்ந்தால்,
மஞ்சப்புடவையும்
திருநீரும்
திரு மாங்கல்யத்துடனும்
முதிர் கன்னி மணபிச்சைக்கேட்டு
நிற்கிறாள் நிறுத்தமொன்றில்.

கோடி படைத்த இறைவன்,
கன்னிக் கண்களுக்கு
சக்தியை சற்றுக்
கூட்டித்தான் கொடுத்தி ருக்கிறான்.

அவள் கண்ணீர்
என் மூளையை
கிளர
வலக்கை
இடக்கை பார்க்கவில்லை.

ஒரு கனம் ஊசல்மனம்
நம்பிக்கைக்கும்
கடமைக்கும் மாறி மாறி
போய் வந்தது
இத்தனிஊசல் நிலையில்
சக்கரம்
சுற்ற வில்லை......

இரு ஆயிரம் தாள்
தட்டிலே வைக்க
கை கும்பிட்டு விர்ரென
இறங்கி போனாள்.

ஊசல் மனம் கொஞ்சம்
ஓய்வுக்கு முற்பட,
"பணம் போட்டாச்சா"
என்ற
தங்கையின் குறுஞ்செய்தி
பார்க்க;
கடமை சக்கரம் மீண்டும்
சுழல்கிறது...

எழுதியவர் : சுந்தர பாண்டி (16-Mar-15, 12:46 pm)
பார்வை : 316

மேலே