விழியோரம் ஈரம்
உன் முத்த மழையில்
நனைய ஆசை
முகத்தில் விழுந்ததோ
முட்கள் .................,
உன்னை கண்டு
சலித்துப்போன
விழிகள்
நீ பார்க்கும் போது
ஒளி இழந்தது
ஏனோ ?
நீ பசியாற
பரிமாறியது
என் இதயத்தின்
தசை
விக்கிகொள்ளும்
வேளைகளில்
நீயருந்தும்
நீர்
நீர்றல்ல ..............,
என் விழியோரம்
கசிந்த ஈரம் .