தொலைத்துவிடாதீர்

ஒரு பட்டாம்பூச்சி
உள்நுழைந்து
காதுகளில் ஏதோ
சொல்லியவாறு
காற்றுப்போக்கில்
பறக்கிறது.

இப்பாேக்குவரத்து
சமிக்ஞையில்
ஒரு தேவதை
சாலைக் கடப்பதால்
இந்நெரிசல் மங்கலாகிறது
அந்த இளைஞனுக்கு.

நகரத்தைத் தாண்டி
விரைந்துப் போகயில்
டயரோட்டும் சிறார்கள் சிலர்
இலந்தைப் பறிக்கிறார்கள்.

தண்டவாளத்தை கடக்கயில்
சத்தம் வைத்தே கண்டறிவார்
நீங்கள் அமர்ந்திருப்பது
எந்த ஊர் பேருந்தென்று
மாடு மேய்க்கும் பெரியவர்.

ஆம்
பயணங்கள்
இனிமையானவை.

மீதிச்சில்லறையில்
மனதை மூழ்க்கி
சன்னலை
தொலைத்துவிடாதீர்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (17-Mar-15, 12:26 am)
பார்வை : 90

மேலே