காக்கைச் சிறகினிலே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.

மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.

படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.

காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.

சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.

மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?

போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.

நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரியின் துப்பாக்கி முனையில் உயிரிழந்த
மாவீரனுக்கு சமுதாயம் செய்யும் மரியாதை
சடலத்தில் நான்கு முழ தேசக்கொடி.

காதல் திருமணம் செய்த தம்பதிகள்
மூன்றுமாதம் கழியும் முன்னே விவாகரத்திற்கு
நீதிமன்ற வாசல் படி ஏறியிறங்குகின்றனர்.
மண்ணில் பாவத்தின் படுகுழி தோன்றிவிட்டது.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (17-Mar-15, 12:29 am)
பார்வை : 688

மேலே