கல்வி வந்து சேரும்

வண்டினங்கள் தேன்தேடி மலர்தாவி ஓடும்
வாலிபங்கள் வலிகொண்டு வாய்ப்புகள் தேடும்

சூரியனின் பார்வைபட்டு இருளகன்று போகும்
சுந்தரத்தமிழ் காற்றினிலே தேனாக பாயும்

நானிலமும் இங்குவந்து ஒன்றாக கூடும்
நம்பிவந்த இதயமெல்லாம் வாழ்த்துக்கள் பாடும்

உற்றவரும் உடையவரும் இல்லாமல் நாளும்
தத்தளிக்கும் மனமிங்கு கல்வியா தேடும்

கற்றறிந்த மொழிகளெல்லாம் கல்வியை பாடும்
கனிவான மனம்கொண்டால் கரங்கள் ஒன்றுசேரும்

தும்பிகளின் துயர்துடைக்க துணிவு கொண்டதாலும்
கம்பிகளை உடைத்திங்கே கல்வி வந்துசேரும்

பெற்றுவைத்த பொருளெல்லாம் பிணம் கொண்டாபோகும்
பெருமைகொண்ட மனிதமனம் என்றிங்கே மாறும்

மொட்டவிழ்ந்து விட்டால்தான் பூவாய் நீயும்
கட்டவிழ்ந்த காளையைப்போல் இருந்தது போதும்

நிச்சயமாய் பெற்றிடுவாய் வெற்றிகளை நாளும்
பிறந்தபலன் நீஉணர்ந்தால் உதவிட தோணும்

ஆதரவாய் கரம்நீட்ட அரண் வந்ததாலும்
தம்பியுன் கல்வியினி முடிவின்றி நீளும்
------------------------------------------------------------------------------------------------------
(அரண் அறக்கட்டளை நிகழ்ச்சியில் நான் எழுதி வாசித்த கவி )
-- குமரேசன் கிருஷ்ணன் --

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (17-Mar-15, 12:19 am)
Tanglish : kalvi vanthu serum
பார்வை : 275

மேலே