கோட்டோவிய மழலைகள் - 13 -கருணா

கோட்டோவிய மழலைகள் - 13 -கருணா

இலையுதிர்காலம்..
பெருங்காற்று வீசியதும்
மொத்தமாய்
தரையுதிர்ந்த இலைகளாய்
வீட்டு மணி அடித்த
பள்ளியின் மணி..
கேட்டு..
பறந்தனர்
பள்ளிச் சிறுவர்கள்..சிறுமிகள்..
உதிர்ந்த இலைகளாய் ..!

கொத்துக் கொத்தாய்
இலைகளை மூட்டைகளில்
அள்ளினாள்..தரை பெருக்கி ..
துப்புரவு செய்யும் கிழவி..

கூட்டம் கூட்டமாய்
கொத்துக் கொத்தாய்
மழலைகளை
பள்ளி வேன்களும்
பிதுங்கி வழியும்
ஆட்டோக்களும்
அடைத்துக் கொண்டு
சீறிப் பாய்ந்தன..
.
மறுநாள் ..
செய்தி .தாளில்..
ஐந்தாம் பக்கத்தில்..

..
கீழே
அந்தப் பள்ளிச் சிறுமியின்
சித்திரம் ..ஒன்று..
கோட்டோவியமாய்..
மூட்டை அடைத்து செல்லும்
ஆட்டோவில்..
மூட்டைகள் போல்
மழலைகள்..
"எங்களை எங்கே கொண்டு
போறீங்க.." என்ற தலைப்பில்
பரிசு பெற்ற
சித்திரமாம்..!

எழுதியவர் : கருணா (17-Mar-15, 8:32 am)
பார்வை : 412

மேலே