கடவுள் சற்று கட உள்

அடடா எங்கு பார்ப்பினும்
இன்று இரு மதங்கள்
கடவுள் உண்டு என்று ஒன்றும்
கடவுள் இல்லை என்று ஒன்றும்

யார் அந்த கடவுள்
அடித்தாலும் பிடித்தாலும்
ஏன் என்று கேட்பது இல்லை
நல்லோர் தீயோர் என
பேதங்கள் பார்ப்பது இல்லை
பணக்காரன் ஏழை
என்ற விகிதத்தை போக்குவதில்லை

எது நடந்தாலும்
எவன் விழுந்தாலும்
இவன் என்று சொல்ல
ஒரு மதம்

எது நடந்தாலும்
எவன் விழுந்தாலும்
அவனே எனபது மூடத்தனம்
இதை சொல்ல ஒரு மதம்

போதுமடா சாமி
நீ யார் என்று காமி
தூணிலும் துரும்பிலும்
நீ என்று சொன்னால்
மடபையன் என்று
சொல்கின்ற ஒரு புறம்

தூணையும் துரும்பையும்
உடைத்தெறிந்து விட்டு
கடவுள் துகள் என
பெயர் வைப்பதும்
அதே புறம்

கடவுள் கடவுள் கடவுள்
அட சே
சற்று கட + உள்.....................

எழுதியவர் : கவியரசன் (17-Mar-15, 9:42 am)
பார்வை : 99

மேலே