நட்பு உபதேசம்

நண்பர்களே..
எதுகை மோனை துணைகொண்டு
வரிகளைச் செதுக்கிடுங்கள்..
கவிதை சிலையாகட்டும்..
கண்போர் கரம்தொடுவர்
கைதட்டி ரசித்திடுவார்..
கவியென உனைப்போற்றி..
இலக்கணங்கள் அருளிடுவார்
முழுமனக் கவியாக..
அன்றே நீ..
வளர்ந்திடுவாய்..
தளறாமல் தடைதாண்டு
எதிர்காலம் உன்கையில்..
..கைகொண்ட மையில்
நானும் உன்போல்தான்..
இனி..
இணைந்தே நடைபயில்வோம்
நம்மை திருத்தும் நற்கவிகள்
வழிநடந்து வென்றெடுப்போம்..
வெற்றி நமதே...

(பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் என் நண்பருக்கும் . புதிய கவிநண்பர்களுக்காகவும்)

எழுதியவர் : moorthi (17-Mar-15, 1:35 pm)
Tanglish : natpu ubadesam
பார்வை : 488

மேலே