என் முன்னே இருக்கும் என்னவள் நினைவோடு பேருந்தில் என் பயணம்
சிரம் புறம் நீட்டாதே
என்பது - உனக்கு
பயந்து
எழுத பட்டதுதானோ
வஞ்சியவள்
சிரம் வெளி சாய்ந்தால்
சீர்கெட்டு போகாதோ
சாலை விதிகள் ?
சீர்கெட்ட இச்சாலையில்
தறிக்கெட்டு ஓடும் இப்பேருந்தின்
குலுங்கலை விட
உன் காதனியொடு சேர்ந்த
உன் அசைவுகள் என்னை
கொல்லுதடி.
உன்னை கண்ட என்
கண்ணுக்கும்
போதை ஏறியதோ ?
கண்ணுக்கு தெரியும் - ஊர்
பெயரெல்லாம்
கண்மணி உன்
பெயராய் தெரியுதடி !
அழுக்கேறிய ஜன்னல்
கண்ணாடியில்
அரைகுறையாய் தெரியும்
உன் பிம்பம் - நீ
விலகி சென்றதும்
அங்கேயே
நிலைதிருக்கிறதே !!
உன்
சாயல் பட்ட கண்ணாடிக்கே
உன்னை
பிரிய மனமில்லையெற்றால்
என்னுள்ளே ஊறிப்போயிருக்கும்
உன்னை எப்படி நான்
பிரியேன்?
நல்லதாய் வாழ
நல்வழி கூறும் - இருவரியை
இப்பேருந்தில் எழுதுவதற்கு
திகட்டா தேன் தமிழில்
தொட்டு எடுத்து
தெவிட்டா இன்பம் தரும்
உன் பெயரே போதுமடி
என் உயிரே...
அதிசயம் கண்டாயோ பெண்ணே
இப்பேருந்தின் வெளியே
இப்பெரிய
உலகம் உன்னை
காண துடித்து
உன்னோடு சேர துடித்து
தோற்றுப்போய் பின்னோக்கி
நகர்கின்றன.
விதி விலக்காக நான்,
வெற்றி வாகையொடு நான்
உன்னோடும்
உன் நினைவோடும் இப்பேருந்தில்.....................