கடவுளும் மனிதனும்
இருண்ட பூமி ஒளி பெறவே
இறைவன் மனிதனை
அனுப்பி வைத்தான் .
இருளும் விலகிட தொடங்கிடவே
இறப்பு உண்டென
அறிய வைத்தான் .
வந்தவன் வந்த நிலை மறந்தான்
படைத்தவனை
பல நூறாய் பிரித்து விட்டான் .
கற்பனை வடிவிற்கு உயிர்கொடுத்து
மதங்கள் இதுவென பெயருமிட்டான்.
கள்ளம் இல்லா உள்ளமென
கடவுள் அனுப்பிய மனிதனவன்
கல்லாய் வாழ பழகிக்கொண்டான்
கர்வத்தில் உயிர்களை
காவு கொண்டான்.
அழியும் உலகில் ஆசைகொண்டு
அன்பெனும்
இறைவனை அழித்து விட்டான்
இறுமாப்பு கொண்டு அவன் அலைந்து
இறப்பு இருப்பதை மறந்து விட்டான்.
ஆட்டம் ஆடி முடித்த பின்னே
போட்டது வேஷம் என புரிந்துகொண்டான் .
படைத்தவன் கொடுத்ததை எடுத்துக் கொண்டான்.
மனிதன்
பூமி நிலையில்லை என அறிந்து கொண்டான்.!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
