நம்பியெழு தம்பி

நம்பியெழு தம்பி....!
அதிகாலை எழுந்திடுவாய் தம்பி -
நல்ல
ஆக்கமுற செயல்புரிவாய் நம்பி ,
இயலாமை இல்லையடா தம்பி -
எதையும்
ஈட்டுதலே இன்பமென்பாய் நம்பி,
உழைப்பாலே உறுதிபெறு தம்பி -
இங்கு
ஊர்ந்துவாழும் எறும்புகளை நம்பி,
எல்லையிலா புகழ்பெறுவாய் தம்பி
- என்றும்
ஏற்றதரும் கருத்துகளை நம்பி ,
ஐயமிலா அறிவுபெற தம்பி - ஆன்
றோர்
நூல்களிலே ஆழ்ந்திடுவாய் நம்பி,
ஓப்புரவே உயர்ந்ததடா தம்பி -
அதற்கு
ஓயாது உழைத்திடுவாய் நம்பி,
ஔவை நூல் அறிந்திடடா தம்பி -
. உனக்கு
அதுவளிகும் வாழ்வுயென நம்பி