ரத்தம் சிந்தும் கண்ணாடிச் சில்லுகள்
கல்லடிபட்டு
உடைந்து சிதறிய
கண்ணாடிச் சில்லுகள்
ரத்தம் சிந்துகின்றன ;
எவரின் காலோ குத்தி ?
துப்பாக்கி ரவைபட்டுச்
சிதறிய
சதைத் துணுக்குகளில் இருந்து
வரும் ஆன்மாவின் வலி
உயிர்வதை ஒலி , ஓலம்
உங்கள் காதுகளுக்குக்
கேட்கவில்லையா ?
கலாச்சார , நாகரிக
ஆடைகளை
காலம் நெய்து தந்தும்
ஆதி மிருகமாய்
நிர்வாணம் ஆனதேன் ?
எதையாவது அடி , உதை
யாரையாவது வெட்டு
துருப்பிடித்து விடாமல்
ஆயுதங்களை இன்னும்
தூக்கிக்கொண்டு
அலைகிறாயே , ஏன் ?
ஆதி மிருகம் விழித்தபோது
மனிதம்
கொலையுண்டு கிடக்கிறது.
ஆம் தற்கொலை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
