விவசாயி

வானம் பார்க்கும் விவசாயி
என்னடா பார்கிறாய்
அம்மா ,
வாய்காலுக்கு நீர் வேண்டும்
என்னிடம் கண்ணீர் தான் உண்டு .
ஏனம்மா ?
என்ன ஆயிற்று ?
பெற்ற புதல்வர்களில் நீ தான் ,நான்
பெற்ற புதல்வன்
ஏனம்மா ?
கட்டாந்தரையில் படுத்திருந்து
காலையில் எழுந்து
காலில் செருப்பிழந்து
காடுமேடு கடந்து
கழனி பார்க்க வரும் மகனே ,நீ இன்னும்
கடனாளியாகவே இருக்கிறாய் ,அதை
கண்டு கண்ணீர் வருகிறது

எழுதியவர் : PRABA (18-Mar-15, 9:39 am)
Tanglish : vivasaayi
பார்வை : 150

மேலே