மீண்டும் பிறப்பெடுப்பேன்

பிரித்தால் பொருள்தராத
இரட்டைக்கிளவியாய்
இணைந்திருந்த நமக்கு
யார் கொடுத்த சாபமோ
பிரிவொன்று நேர்ந்தது ..

பஞ்சபூதங்கள் அடுத்தடுத்து
பாதிப்பை ஏற்படுத்திய
பாழ்பட்ட பூமியாய்
உன் நினைவுகளில்
என் மனம் ...

உன் நிழல் தேடிச்சென்ற
வழியெங்கும் வலிபெற்று
விழி சிந்திய கண்ணீர்
உணர்த்தியது நட்பென்பது
உறவில் தேடும் உள்ளம் அல்ல
உள்ளத்தில் தேடும் உறவென்று..

நான் இல்லாத
மனிதவாழ்வா என்று
ஏளனம் செய்தது விதி...

நாம் சந்திக்க நேர்ந்தால்
உன் பிரிவின் வலி சொல்வேன்
இல்லையெனில் ...
உன் நட்பை மூச்சுள்ளவரை
முழுமையாய் அனுபவிக்க
மீண்டும் பிறப்பெடுப்பேன்..!!

எழுதியவர் : பாரதிகண்ணம்மா (18-Mar-15, 8:41 pm)
பார்வை : 97

மேலே