என்னை என்ன செய்வாயோ
நேற்றுவரை நீ யாரோ
இன்று நீயின்றி நான் யாரோ
கனவுகளில் என் வாழ்வை புதைத்திடுவாயோ
கைகோர்த்து என்னோடு நடந்திடுவாயோ
தாலாட்டு பாடும் தாயாய் வருவாயோ
கவலை மறந்தென்னை உறங்க வைப்பாயோ
எனக்கென்ன என்றெண்ணி விலகி நிற்பாயோ
கண்ணீர் நிறைந்த வாழ்வினை பரிசலிப்பாயோ
என் பிள்ளையினை உன் மடியினில் நீ சுமாப்பாயோ
நானே இறந்து உன் பிள்ளையாய் பிறக்க வைப்பாயோ
முத்தங்கள் பல தந்து என்னை மூழ்க வைப்பாயோ
வலிகளை நீ தந்து என்னை கலங்க வைப்பாயோ
இவை அனைத்திற்கும் விடை தந்து முடித்து வைப்பாயோ
கேள்வி குறியாய் எனை வளைத்து தொடர்ந்திடுவாயோ
எதுவாக இருப்பினும் என் உயிர் நீயே
புன்னகை பூத்து என்னை மகிழ வைப்பாயே…!!!