பிரியத்தின் சிறகிற்கு பிறந்தநாள் - இராஜ்குமார்

பிரியத்தின் சிறகிற்கு பிறந்தநாள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திகைக்கும் தேசத்தில்
நீலநிற நீரோடையை தவழும்
பொன்னிறப் பூக்களை
தந்திர மொழிகளால்
தத்தையென ரசிப்பவள் நீ ..!

கடற்கரை கன்னத்தில்
செவ்வான சிதறல் படர
முக்கடலின் முகங்களை
சித்திர கலைகளால்
அலையென செதுக்கியவள் நீ .!

கனவின் கவிகளில்
தேன்மொழி நினைவே நிறைய
புலமைப் பொழுதுகளை
பிரியத்தின் கீதங்களால்
மழையென பொழிபவள் நீ ..!

தங்கத்தின் விரல்களில்
பட்டாடை பரிசாய் விரிய
தன்னிலை தவிப்புகளை
உன்னத உளறல்களால்
துருவமென உறைந்தவள் நீ ..!

உணர்வின் உள்ளத்தில்
பக்குவ பகிர்வு நுழைய
பாசத்தின் பக்கங்களை
உயிர்மொழி வரிகளால்
தங்கையென மிளிர்பவள் நீ ..!

பதியும் பாதச் சுவடுகளில்
உதிரும் நிலவுகளாய் ....உலவ ..

வெட்டிய விரல்களை
விரட்டும் விழிகளாய் ....ஒளிர ..

நனையும் துளிகளில்
கலையும் நிஜங்களாய் ....உடைய

சுழலும் நொடிகளில்
அவிழும் கனவுகளாய் ...உறைய..

மிதக்கும் உலகில்
மின்மினி சிறகில்
வர்ணம் தெளித்து
உடன்பிறவா ஒருவன்
உளமார வாழ்த்துகிறேன் ..
உன்னத வளமுடன் வாழ ...


-அன்புடன் அண்ணன் ..
இராஜ்குமார்..


இன்று ( மார்ச் 19. )பிறந்த நாள் காணும் ......தங்கை பிரியாவிற்கு ...
எனது பிறந்த நாள் வாழ்த்துடன் ..சங்கீதா, சந்தியா , பாரதி ..என ..தங்கைகளின் வாழ்த்தையும் வரைகிறேன் .. .

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Mar-15, 12:05 am)
பார்வை : 1347

மேலே