மனிதன் மாறிவிட்டான்

மனம் போல .. மனம் போல
மனதினை மனிதன் வளர்த்தானோ..
விஷம் போல ..விஷம் போல
மனதினில் வஞ்சம் வளர்த்தானோ..

விதைத்தானோ..விதைத்தானோ..
பிரிவினை எண்ணம் விதைத்தானோ
மறந்தானோ..மறந்தானோ
மனிதத்தையே மறந்தானோ..!

விலங்கில் இருந்து வளர்ச்சி அடைந்தவன்
விலங்காய் மாறிவிட்டான் ..சொந்த
இனத்தினையே அவன் அழிக்கின்ற வழியிலே
நாளும் நடக்கின்றான் ..!

காமமும் குரோதமும் ஆணவம் கலந்து
ஆசையில் உழல்கின்றான்..நெஞ்சில்
வாய்மையும் தூய்மையும் நேர்மையும் தொலைத்தே
பேயென அலைகின்றான்..!

எழுதியவர் : கருணா (19-Mar-15, 9:30 pm)
பார்வை : 413

மேலே