மன்னிச்சுக்க அண்ணா

அன்பைக் கொட்டி
அள்ளி அணைத்து என்
அனைத்துக் காயங்களுக்கும் மருந்தானவன் நீ!

இரவு நேர விழிப்பில்
கவலை மறந்து நான் தூங்க
என் தாயாய்
ஆரிரோ பாடியவன் நீ!

என் கல்லூரித் தோழிகள் அனைவருக்கும்
நம் இருவரின் பாசப் பகிர்வில்
சற்று அதிகப் பொறாமை தான்!

உன்னைக் கோபப்படுத்தி
அழுகவைப்பதில் கொள்ளை
ஆனந்தம் தான் எனக்கு,சேரும்போது
இன்னும் கொஞ்சம் பாசம் கூடுமென்பதால்!

உன் கோபம் தீர்க்க
பல மன்னிப்புக் கோரிக்கைகள்
பல மணி நேர அழுகை என
ஒட்டுமொத்த வலியும் ஒன்றாய் அனுபவித்துவிடுகிறேன் நான்!

இன்று கூட உனக்கும் எனக்கும் சண்டை தான்-அண்ணா
தயவு செய்து அழுகமட்டும் வைத்துவிடாதே!
அம்மாவிடம் சொல்லிதந்துவிடுவேன் நான்!!!

எழுதியவர் : பபியோலா (19-Mar-15, 10:48 pm)
பார்வை : 254

மேலே