ஜோக்ஸ்

சிரிப்பு:1
நோயாளி:டாக்டர்...!எனக்கு பல் ஆடுது.
டாக்டர்:எந்த பாட்டுக்கு???

சிரிப்பு:2
மகன்:அப்பா!இனிமே கம்பியூட்டர் படிச்சாதான்
நல்ல வேலை கிடைக்கும்
அப்பா:அப்ப....நீ படிச்சா கிடைக்காதா..???

சிரிப்பு:3
ஒருவர்:என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை
அடித்து விட்டார்கள்!
மற்றவர்:பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்...???

சிரிப்பு:4
நண்பன்:டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப்
போறேன்! நீயும் வந்துவிடு!
மற்றவர்:கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம்
என்றால் நான் சும்மா இருப்பேனா???

சிரிப்பு:5
மனைவி:ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம்
சொல்லக் கூடாதா.அவருக்குப் பார்த்த பெண்
நல்லாவே இல்ல..!
கணவர்:நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல்
எனக்கு அவன் சொன்னானா..!!!!

சிரிப்பு:6
நோயாளி:இரண்டு இடியப்பத்தைக்கூட முழுசா
சாப்பிட முடியல டாக்டர்.....???
டாக்டர்:என்னாலையும் முழுசா இரண்டு இடியப்பத்தை
சாப்பிட முடியாது,பிச்சுதான் சாப்பிடனும்..!!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (20-Mar-15, 9:41 am)
பார்வை : 297

மேலே