சிரிக்க மட்டும் தான்

கொசுக்கள் தாக்காமல் இருக்க நெல்லை சுற்றி வேலி அமைத்த மாவட்டம் எது?

அட நம்ம திருநெல்வேலி தாங்க



குப்பைகள் இல்லாமல் சாராயத்தை தூற்றி குடிக்கும் மாவட்டம் எது?

அட பக்கத்துல இருக்குற தூத்துகுடி தாங்க


குமரி பெண்கள் அதிகம் இருக்குற மாவட்டம் எது ?

அட கன்னியாகுமரி தாங்க


மதுவையே கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மாவட்டம் எது ?

அட மதுரை(ஐ) தாங்க


வேல்களே அதிகம் உள்ள மாவட்டம் எது ?

அட வேலூர் தாங்க


தர்மம் செய்தால் தலை கீழாய் கட்டி தோலுரிக்கும் மாவட்டம் எது?

அட தருமபுரி தாங்க


நன்றாக திண்டே உடல் கல்லாய் மேலெழும்பிய மாவட்டம் எது?

அட திண்டுக்கல் தாங்க


பல்லில்லா கிழவிகளே தஞ்சம் புகும் மாவட்டம் எது ?

அட தஞ்சாவூர் தாங்க


ஓசி விருந்துக்காக விருதே அளிக்கும் மாவட்டம் எது ?

அட விருதுநகர் தாங்க


எப்பொழுதும் ஈக்களே மொய்க்கும் ரோட்டினை கொண்ட மாவட்டம் எடு?

அட ஈரோடு தாங்க


தேனீக்களே வாழ உகந்த மாவட்டம் எது ?

அட தேனி தாங்க

பாம்புகளே வாழ உகந்த மாவட்டம்
எது?

அட நாகபட்டினம் தாங்க

எழுதியவர் : கவிபுத்திரன் (19-Mar-15, 9:59 pm)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே