பள்ளிதந்த முதற்பாடம்

உலகை..
அறியவைத்து புரியவைத்த..
அன்னைமடிதான் என்னுலகம் என்றிருந்தேன்
அவன் உலகை எனக்குத்தந்து...
அண்ணனவன் செல்லுமிடம்
சென்றுபார்க்க ஓராசை
பள்ளியென்ற ஓரிடமாம்..
பாடஞ்சொல்லி தந்திடுமாம்..
நட்பென்ற புதுவுறவாய்..
நாலுபேரைத் தந்திடுமாம்
அண்ணன் சொன்ன கதைகேட்டு...
ஆசையாய் பள்ளிசென்றேன்
சாதிகேட்டு மதங்கேட்டு..
சமத்துவத்திற்கு சீருடை தந்து..
பள்ளிதந்த முதற்பாடம்...
புரியலையே இன்னும் எனக்கு...

எழுதியவர் : moorthi (20-Mar-15, 12:54 pm)
பார்வை : 191

மேலே