எனக்கு துணையாக வரும் நம் நட்பின் நினைவுகள் 555

தோழியே...
கரையை வந்து தொட்டு
செல்லும் அலைகளை போல...
நம் நினைவலைகள்
என்னில் வந்து மோதுகிறது...
நான் ஊதிய சிகரெட்காக
அன்று நீ வருந்தினாய்...
அன்று முதல் மறந்தேன்
புகைபிடிப்பதை...
விண்ணில் தோன்றும்
கார்மேகம் போல்...
கரைந்து செல்வதில்லை
நம் நினைவுகள்...
நாம் ஓடிவிளையாண்ட
பள்ளி மைதானம்...
இன்று கட்டிடமாய்
நிற்கிறது...
எனகென்று ஏதும் இல்லை
மறைத்து வைத்திருக்க...
நம்மை சேர்ந்துவைத்த
பள்ளி வளாகமே...
நம் நட்பின்
ஆரம்ப புள்ளி...
நான் எங்கு சென்றாலும் எனக்கு
துணையாக வருவது...
நம் நட்பின்
நினைவுகள்தான்...
திருமண பந்தம் பிரித்தது
உன்னை என்னிடம் இருந்து...
தோழி சேர்ந்து உரையாட
முடியாவிட்டாலும்...
பார்க்கும் நாட்களில்
எனக்கு நீயும்...
உனக்கு நானும் கொடுக்கும்
புன்னகையில் நலம் விசாரிப்பு...
அதுவே போதும் தோல்
கொடுக்கும் என்னுயிர் தோழியே...
என்றும் நம் நட்பின்
நினைவுகளுடன்...
உன் நண்பன்.....