நட்பின் நினைவாய் -சகி

நட்பே
கல்லூரி பருவங்களில்
கைக்கோர்த்து நடந்தோம் ...
கல்லூரி பருவம் முடிந்து
பிரிந்து இன்று நம் நட்பின்
நினைவுகளோடு நடைபோடுகிறோம் ....
தோள் கொடுத்தாய் -என்
தோழனாக சோகங்களை
உன் மடியில் புதைக்க ....
கரம் கொடுத்தாய்
நல்வழியில் என் வாழ்க்கை
பயணம் செல்ல....
செவி சாயித்தாய்
என் இன்ப துன்பங்களில்
பங்கு கொள்ள.....
கல்லூரி வராமல்
திருட்டுத்தனமாக சினிமா சென்று
வந்து மன்னிப்பு விண்ணப்பம்
வைப்பாய் ....
மன்னிக்க தவறிய
நாட்களுக்கு ஆயிரம் முறை
மன்னிப்பு கடிதம் கொடுத்து
மன்னிப்பு கேட்பாய் ...
உன் காதலியிடம் கூட
கேட்க மாட்டாய் அவ்வளவு
மன்னிப்பு....
கைக்கோர்த்து நாம் சென்ற
சாலையில் தவறான எண்ணத்தில்
எத்தனையோ பார்வைகள் ...
ம்ம்ம்ம் ...........
அவர்களுக்கு புரியுமோ
நம் நட்பு சகோதர தன்மை
கொண்டது என்று....
கண்டும் காணமல்
செல்லும் நம் பயணம்....
மதிய உணவை என்னிடம்
சண்டையிட்டு வாங்கி செல்வாயே.
மறக்கவில்லையடா.....
சொல்லாமல் செய்யும் தவறுக்கு
மண்டியிடுவாய் அன்னையிடம்
மழலை கெஞ்சுவது போல் ...
சில செல்ல செல்ல சண்டைகள் ..
பேசாமல் கூட சில வருடங்களை
கடந்து விட்டோம்....
ஆண்பிள்ளை அடங்கி போவது
உயிர் தோழியிடம் மட்டுமே என்பாய் ...
உன்னால் உணர்ந்தேனடா .....
நம் உன்னத உறவு
தொடர வேண்டுமே ...
நம் சம்மந்திகள் ஆவதன்
வாயிலாக ...
உன் அழைப்புகளை தவற
விடுகிறேன் ....திட்டிக்கொண்டே
திரும்பவும் முயற்சிக்கிறாய் ...
மன்னித்து விடு தோழா.....
அந்நாட்களில் என்
பிறந்தநாளன்று முதல்
வாழ்த்து நண்பனே உன்
வாழ்த்து மட்டுமே....
காலங்கள் சென்றாலும்
நட்பின் நினைவுகள்
என்றும் மாறபோவதில்லை
மறக்கபோவதும் இல்லை ...
அன்றல்ல இன்றல்ல
என்றுமே மாறது நம்
நட்பின் நினைவுகள் ...
நட்பின் நினைவுகள் மட்டும்
என்றுமே திகட்டாதவை ...
(என் அன்பு தோழமைகளுக்கு சமர்ப்பணம் )