தீராப் பசி

மௌனங்கள் உடையுது
பார்வைகள் முங்கும்...
சலனங்கள் படியுது
வியர்வைகள் தங்கும்...

கனவுகள் விடியுது
கவிதைகள் அங்கும்...
உணர்வுகள் படையிது
உயிர்கள் எங்கும்....

பருவங்கள் நிறையுது
போர்வைகள் கெஞ்சும்....
துருவங்கள் குறையுது
போர்முனை மிஞ்சும்....

வேதங்கள் மறையுது
வெண்ணிறம் இரவில்....
பாதங்கள் நுரையுது
பெண்ணிறம் திறவில்....

புது மொழி மைவிழி
உன் விரல் பா உளி...
பல மொழி என் விழி
என் நகம் தேன் துளி...

என் வழி நீ களி
உன் ஒளி நான் வெளி...
பெண் புலி நீ குளி
வெண் துளி நான் பலி....

கன்னங்கள் சிதறும்
வண்ணங்கள் நானடி...
எண்ணங்கள் அதிரும்
திண்ணங்கள் நீயடி...

ஜன்னல் திறந்திருக்க
தோள் சாயும் பின்னிரவு...
பின்னல் மறந்துவிட்ட
மேகவலை நம் இரவு ....

மீண்டும் மௌனங்கள்
மீண்ட மௌனங்கள்....
மீட்டுகின்ற சொல்லெடுத்து
மெட்டானோம் கள் தொடுத்து....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Mar-15, 2:39 pm)
பார்வை : 119

மேலே